OCOF Short film Released

OCOF Short film Released
Please click on the above image to watch the tamil short film

Saturday, August 12, 2017

எனக்கான பாதையில்

ஆண்டவனே அறிவைக்கொடு என்றதொரு காலம் ;
அறிவோடு ஆண்டவனைத்தேடு என்றது மற்றொரு காலம் ;
காலங்கள் மாறினாலும் கல்லறைகள் விரும்பினாலும்
கரைந்திடாத கலங்கரை Controversial king கடவுள்.


கேடுகெட்டதெல்லாம் நாடு கெட்டதென்று சொல்லிகேட்கையில் நாண்டுகிட்டதோ நீதியென்று வேண்டிகொண்டேன் ஆண்டாவா நெருப்பள்ளிபோட்டு தாண்டவா இன்னொருமுறை மீண்டு(ம்)வா


அரிசியையும் அரசியலாக்க பார்ப்பவன் அரசியல்வாதி ; அந்த
அரசியலை அரிசிக்காக பார்ப்பவன் நாட்டின் ஏழை சாதி.



வாய்க்கரிசி இல்லாத வீட்டில் வருமானவரி நீ கேட்டால்
வயல்வெளி இல்லாத நாட்டில் வல்லரசாகி நிற்கிறேன் நடுரோட்டில் .


எனக்கான பாதையில் நான் பயணிக்கிறேன்
வருபவர்களை வரவேற்கிறேன்
வருந்துபவர்களை விலக்கிவைக்கிறேன்.


அனைத்திற்கும் அதிர்வது என் வழக்கமல்ல ;
அமைதி மட்டுமே என் பழக்கமுமல்ல .


உழைத்தால் உயர்வென்றால் உழுதவனே உயரேயிருப்பான்; நான் பிழைத்தால் போதுமென்றால் நயவஞ்கனே நாட்டில் மிச்சமிருப்பான்

2 comments: