முகநூல் பதிவுகளின் தொகுப்பு

இது வளர்ச்சியென்றால் அது ஆளுங்கட்சி ;
எது வளர்ச்சியென்றால் அது எதிர்க்கட்சி ;
அடச்சீ கேட்டுகேட்டு அழுத்துப்போச்சுயென்றால்
அது அன்னாடங்காட்சி அதுவே மக்களாட்சி


எது மாற்றம் என புரியாதவரை ஏமாற்றம் ஐந்தாண்டுக்கொருமுறை தாலாட்டும்


பெருவாரியான மக்களுக்கு அரசியலென்பது அதிரடி திருப்பங்கள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமே அதைத்தவிர வேறொன்றுமில்லைவிலைமதிப்பற்றதையும் விளம்பரங்களாலேயே விலைபேசவேண்டிய வியத்தகு உலகில் விழித்துக்கொண்டிருக்கிறோம்


வலியோடு பேசுபவனுக்கும் ; வக்காலத்து வாங்குபவனுக்கும் வித்தியாசங்கள் உண்டு விதண்டாவாதத்திற்கு விலகி நிற்பதே நன்று


எல்லோரிடமும் கோபங்கள் உண்டு ஆனால் அது வெடிப்பதென்னவோ புரட்சியாளர் ஒருவனைக்கொண்டுரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு :- Boys like innocent Girl ; Girl like innocent Boy அப்படினு சொல்றாங்க... Innocent னா இளிச்சவாயா இல்ல இளிச்சுக்கிட்டே இருக்குற வாயா?

Comments

  1. இளிச்சவாயன்தான்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ... நன்றி நண்பா

      Delete

Post a Comment